சினிமா செய்திகள்

பெரிய இலாபத்துக்கு விற்கப்பட்ட பொன்மகள்வந்தாள் – திரையுலக ஆச்சரியம்

அறிமுக இயக்குநர் ஜெ.ஜெ.ஃபிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்தப் படத்தில் நடிகை ஜோதிகாவுடனே பிரபல இயக்குநர்களும், நடிகர்களுமான பாக்கியராஜ், பார்த்திபன் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

கோவிந்த் வசந்தா இப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெறும் ‘வா செல்லம்’,’கலைகிறதே கனவே’ ஆகிய பாடல்கள் வெளீயாகியிருக்கின்றன.

இப்படம் மார்ச் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என்று எண்ணிய நிலையில் கொரோனா காரணமாக வெளியீட்டுத் தேதி தள்ளிப்போயிருக்கிறது.

இந்நிலையில், திரையரங்குகளுக்கு வருவதற்கு முன்பே நேரடியாக இணையதளத்தில் வெளீயிட முடிவு செய்துவிட்டார்களாம்.

அமேசான் நிறுவனத்துக்கு அதற்கான உரிமை வழங்கப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதற்கான விலை ஒன்பது கோடி என்கிறார்கள்.

வெளியாகாத ஒரு படத்துக்கு இவ்வளவு விலை கிடைத்திருக்கிறது என்பது பெரும் வியப்பு என்பதோடு, இந்த விலை என்றால் பாதிக்குப் பாதி இலாபம் கிடைத்திருக்கிறது என்று பொருள்.இதனால் தகவலறிந்தோர் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.

Related Posts