குலதெய்வம் கோயிலில் யோகிபாபு திருமணம்
தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகிபாபு. கதாநாயகனாகவும் சில படங்களில் நடிக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு யோகி பாபுவுக்குத் திருமணம் முடிவாகிவிட்டது என்றும், பிப்ரவரி முதல் வாரத்தில் திருமணம் என்றும் தகவல் பரவியது.
மணமகள் பெயர் பார்கவி என்று பெயருடன் செய்தி வெளியானதால், இது உண்மை என்று பலரும் யோகி பாபுவுக்கு வாழ்த்து தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த தகவலுக்கு யோகி பாபு தனது ட்விட்டர் தளத்தில் , என் திருமணம் பற்றி வந்த தகவல் தவறானது. என் திருமணத் தகவலை வெகு விரைவில் நானே அறிவிப்பேன். நன்றி”என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை (05.02.2020) யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் அவருக்கும் மணமகள் மஞ்சு பார்கவிக்கும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்தத் தகவலை அவரே அறிவித்துள்ளார்.











