சினிமா செய்திகள்

மாஸ்டர் வியாபாரம் விஜய் எடுத்த புதுமுடிவு

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’.இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, வி.ஜே.ரம்யா, கெளரி கிஷண் உள்ளிட்ட பலர்  நடித்து வருகிறார்கள்.லலித் குமார், சேவியர் பிரிட்டோ ஆகியோர் தயாரித்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. இன்னொரு பக்கம் அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், படத்தின் ஒட்டுமொத்த வியாபாரத்தையும் முடித்துவிட்டனர்.

இப்படத்தின் வியாபாரத்தைப் பொறுப்பெடுத்திருப்பவர் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித்குமார்.

அவர்,  இப்போதே தமிழக விநியோகஸ்தர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

அதன்படி,

திருநெல்வேலி, கன்னியாகுமரி – ஸ்ரீ சாய் கம்பைன்ஸ் 

மதுரை – சுஷ்மா சினி ஆர்ட்ஸ்  

திருச்சி, தஞ்சாவூர் – ப்ளஸ் மேக்ஸ் பிலிம்ஸ் 

சேலம் – ஸ்ரீ ராஜ் பிலிம்ஸ் 

கோயம்புத்தூர் – கந்தசாமி சினி ஆர்ட்ஸ் 

வட ஆற்காடு, தென் ஆற்காடு – 5 ஸ்டார் செந்தில்

செங்கல்பட்டு – தனம் பிக்சர்ஸ் 

சென்னை – ஸ்ரீ கற்பக விநாயகா பிலிம்ஸ் சர்க்யூட்ஸ் 

பொதுவாக ஒரு நடிகரின் முந்தைய பட வசூலைப் பொறுத்தே அடுத்த படத்தின் வியாபாரம் நடக்கும். 

அப்படிப்பார்த்தால், விஜய்யின் முந்தைய படமான பிகில், தமிழக திரையரங்குகளில் செய்த வசூலில் தயாரிப்பாளரின் பங்கு சுமார் 81 கோடி என்று சொல்லப்படுகிறது.

அதனடிப்படையிலும் இப்படத்தில் விஜய்சேதுபதியும் இருக்கிறார் என்றும் சொல்லி வியாபாரம் செய்திருந்தால் இப்படத்தை சுமார் 90 கோடிக்கு வியாபாரம் செய்திருக்கலாம்.

ஆனால், தயாரிப்பாளர் லலித்குமார், முந்தைய பட வசூலைக் கணக்கிட்டு வியாபாரம் செய்தால், நமக்குப் பணம் வரும் ஆனால் நம் படத்தை வாங்கும் விநியோகஸ்தர்களுக்கு இலாபம் குறைவாகவே வரும். 

எனவே, இப்படத்தை வாங்கும் எல்லா விநியோகஸ்தர்களும் நல்ல இலாபம் பார்க்கவேண்டும் எனவே, பிகில் வசூலைக் கணக்கில் கொள்ளாமல் வியாபாரம் செய்யவேண்டும் என்று முடிவெடுத்தாராம். 

இந்த விசயம் தெரிந்த நடிகர் விஜய் நல்ல முடிவெடுத்தீர்கள் அப்படியே செய்யுங்கள் என்று பாராட்டினாராம்.

அதனால், இப்படத்தின் தமிழக வியாபாரம் பிகில் வசூலைவிட பதினைந்து கோடி குறைவாக அதாவது 66 கோடிக்கு வியாபாரம் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

இதனால் விநியோகஸ்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்களாம். 

இது இப்படத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த திரைத்துறைக்கே மிகவும் நன்மை ஏற்படுத்தக் கூடிய நிகழ்வு என்று சொல்லி எல்லா விநியோகஸ்தர்களும் விஜய்யையும் படக்குழுவினரையும் பாராட்டி வருகிறார்கள்.

Related Posts