அஜீத்தின் வீரம் படத்தில் 40 இலட்சம் நட்டம் – தயாரிப்பு நிறுவனம் பதில்
விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படம் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால் அறிவித்தபடி நேற்று காலை வெளியாகவில்லை.
படத்தைத் தயாரித்த விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பொருளாதாரச் சிக்கல் காரணமாக அப்படம் வெளியாகவில்லை என்று சொல்லப்பட்டது.
இந்நிறுவனம், விஜய் நடித்த பைரவா, அஜீத் நடித்த வீரம் உட்பட பல படங்களைத் தயாரித்த நிறுவனம்.வீரம் படத்தால் ஏற்பட்ட நட்டமும் சங்கத்தமிழன் சொன்னபடி வெளியாகாமல் போகக் காரணம் என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் எல்லாச் சிக்கல்களும் சரி செய்யப்பட்டு மாலைக்காட்சி படம் வெளியானது. சில ஊர்களில் மட்டும் இன்று காலை படம் வெளியானது.
நேற்று பட வெளியீடு தொடர்பாக, படத்தைத் தயாரித்த விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ட்விட்டரில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டது.
ரசிகர்களுன் கேள்விகளுக்கும் பதிலளித்துக் கொண்டிருந்தது.
அப்போது ஒருவர், வீரம் படத்தால் 40 இலட்சம் நட்டம் என்று சொல்லப்படுகிறதே. அதுகுறித்து தெளிவு படுத்துங்கள் என்று கேட்டிருந்தார்.
அதற்கு, ஒவ்வொரு கதைக்கும் மூன்று பக்கங்கள் உண்டு, உங்கள் பக்க நியாயம், எங்கள் பக்க நியாயம் மற்றும் உண்மை என்று பதிலளித்துள்ளது.
அஜீத் படத்தால் நட்டமா? என்று கேட்டால் அதற்கு நேரிடையாகப் பதில் சொல்லாமல் கமல் மாதிரி பதில் சொல்லியிருக்கிறது விஜயா புரொடக்ஷன்ஸ் என்கிற விமர்சனங்கள் வருகின்றன.











