தர்பார் – ஆவேசமாகக் குரல் கொடுத்த ரஜினி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதீக் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தர்பார்’.
இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது படத்தின் குரல்பதிவு ( டப்பிங் ) பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
இன்று நடிகர் ரஜினி தன்னுடைய காட்சிகளுக்குக் குரல் கொடுத்துள்ளார்.
இந்தத் தகவலை வெளியிட்டுள்ள லைகா நிறுவனம்,இரண்டு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. அதிலொன்றில் ரஜினி ஆவேசமாகப் பேசுவது போல் இருக்கிறது.
அதோடு படத்தில் ரஜினியின் பெயர் ஆதித்யா அருணாசலம் என்றும் குறிப்பிட்டிருக்கிறது லைகா நிறுவனம்.
இதை ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.











