விஜய் 64 பட நாயகிக்கு மணிரத்னத்தால் நேர்ந்த சோகம்
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.
டிசம்பர் 12 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை இறுதி செய்திருக்கிறார்களாம்.
இப்படத்தில் நடிப்பதற்காக அழைக்கப்பட்ட அமலாபால், தேர்ந்தெடுக்கப்படவில்லை.
சத்யராஜ் அவராகவே விலகிக் கொண்டார் என்று சொல்லப்பட்டது.
அமலாபால் போலவே மேலும் இரு நடிகைகளுக்கு லுக் டெஸ்ட் எடுத்த பிறகு சரியில்லை என்று அனுப்பிவிட்டாராம் மணிரத்னம்.
இயக்குநர் பிரியதர்ஷன் லிசி தம்பதியினரின் மகள் கல்யாணியை அழைத்து லுக் டெஸ்ட் எடுத்துப்பார்த்தார்களாம். அதன்பின் திருப்தியில்லை என்று சொல்லி அனுப்பிவிட்டாராம் மணிரத்னம்.
கல்யாணி இப்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் பேட்ட படத்திலும் இப்போது விஜய் 64 படத்தில் நாயகியாகவும் நடித்துக் கொண்டிருக்கும் மாளவிகாமோகனன் தான் நிராகரிக்கப்பட்ட இன்னொரு நடிகை.
அவரையும் லுக்டெஸ்ட் எடுத்துப் பார்த்துவிட்டு சரியில்லை என்று அனுப்பிவிட்டாராம்.
உலகப்புகழ் பெற்ற இயக்குநர் மஜித்மஜிதி, தன் படத்தில் மாளவிகாமோகனனை நடிக்க வைத்தார். அவரும் நன்றாக நடித்து கவனம் பெற்றார்.
அவரை மணிரத்னம் நிராகரித்திருக்கிறார்.அழகு,நடிப்பு ஆகியனவற்றைத் தாண்டி மணிரத்னம் வேறு ஏதேனும் எதிர்பார்க்கிறாரோ?











