September 25, 2026
சினிமா செய்திகள்

ரஜினி 168 – வெற்றி பெற்ற இயக்குநர்

அஜீத்தின் விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் 168 ஆவது படத்தை இயக்குகிறார் சிவா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அந்தப்படத்தில் ரஜினியின் ஜோடியாக ஜோதிகாவும் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் உலவுகின்றன.

இந்தப்படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத்தை வைத்துக் கொள்ளலாம் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் ரஜினி தரப்பிலும் சொல்லப்பட்டதாம்.

ஆனால் இயக்குநர் சிவாவோ அனிருத் வேண்டவே வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகச் கூறப்படுகிறது.

அஜீத்தை வைத்து சிவா இயக்கிய வேதாளம், விவேகம் ஆகிய இரு படங்களுக்கு அனிருத் இசையமைத்திருந்தார். அப்போதே அனிருத் மீது சிவாவுக்கு அதிருப்தி ஏற்பட்டதாம்.தேவைப்படும் நேரத்தில் அவரைத் தொடர்பு கொள்ளவே முடியாது. அவர் நினைத்தால்தான் தொடர்பு எல்லைக்குள் வருவார் என்பதால் அனிருத் மீது கடும் அதிருப்தியில் இருந்தாராம் இயக்குநர் சிவா.

அதனால்தான் விஸ்வாசம் படத்துக்கு இமானை இசையமைப்பாளராக்கினார் என்று சொல்கிறார்கள்.

இந்நிலையில் இப்போது மீண்டும் அனிருத்தை வைத்துக் கொள்ளவேண்டும் என்கிற கோரிக்கை வந்ததையும் சிவா நிராகரித்திருக்கிறார் என்கிறார்கள்.

அவரை சமாதானம் செய்து அனிருத்தை இசையமைப்பாளராக்கும் முயற்சி நடக்கிறதாம்.

என்ன நடக்கும்? என்கிற கேள்விக்கு, இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்போதுதான் சரியான விடை கிடைக்கும் என்று சொல்லப்பட்டது.

இன்று (அவம்பர் 13) மாலை அதற்கான விடை கிடைத்திருக்கிறது.ரஜினி 168 ஆவது படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஜினி தரப்பு தயாரிப்பு தரப்பு ஆகியனவற்றின் கருத்துகளை மீறி தான் நினைத்ததைச் சாதித்திருக்கிறார் இயக்குநர் சிவா.

விஸ்வாசம், நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய வெற்றிப்படங்களுக்குப் பிறகு இந்தப்படம் டி.இமானுக்கு அமைந்திருக்கிறது. இதனால் அவரும் பெருமகிழ்ச்சியில் இருக்கிறார்.

Related Posts