பிகில் தமிழக வியாபாரம் – சென்னை சேலத்தில் நடந்த பெரும் மாற்றம்
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள பிகில் திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ஸ்கிரீன்சீன் நிறுவனம் பெற்றுள்ளது.தமிழக உரிமை சுமார் எழுபது கோடி என்று சொல்லப்படுகிறது.
அக்டோபர் 25 ஆம் தேதி பிகில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் விநியோகஸ்தர்களின் விவரமும் விலை விவரமும் பரவி வருகிறது.
அதன் படி….
சென்னை – கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் – 7 கோடி
செங்கல்பட்டு காளியப்பன் -18.75 கோடி
நார்த் சவுத் மாலி 10.5 கோடி
கோவை கந்தசாமி ஆர்ட்ஸ் – 14 கோடி
மதுரை சூர்யா மூவிஸ் – 12 கோடி
நெல்லை கன்னியாகுமரி வசுந்தராதேவி பிலிம்ஸ் – 5.1 கோடி
சேலம் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் -7.20 கோடி
திருச்சி கற்பகம் பிலிம்ஸ் – 9 கோடி
மொத்தம் 83.55 கோடி
என்று சொல்லப்படுகிறது.
இதில் சொல்லப்படாத செய்தி என்னவென்றால், எல்லாப் பகுதிகளிலும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் படத்தைக் கொடுத்தவர்கள் சென்னை சேலம் ஆகிய இரு பகுதிகளில் மட்டும் விநியோக அடிப்படையில் கொடுத்திருக்கிறார்களாம்.
இவர்கள் சொன்ன விலைக்கு யாரும் வாங்க முன்வராததால் அவ்விரு பகுதிகளிலும் விநியோக அடிப்படை என்கிறார்கள்.











