விஜய் பெயரை தவறாக எழுதிய ஏ.ஆர்.ரகுமான் – ரசிகர்கள் விமர்சனம்
விஜய் நடித்திருக்கும் பிகில் படம் தீபாவளியை ஒட்டி அக்டோபர் கடைசி வாரத்தில் வெளியாகவிருக்கிறது.
இதனால் அப்படத்தின் டீசர் எனும் குறுமுன்னோட்டம் மற்றும் ட்ரெய்லர் எனும் முன்னோட்டம் ஆகியனவற்றை வெளியிடக் கோரி விஜய் ரசிகர்கள் மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அப்படக்குழு, இன்று மாலை ஆறுமணிக்கு பிகில் படத்தின் தெலுங்குப்பதிப்பின் பெயர் மற்றும் முதல்பார்வையை வெளியிட்டிருக்கிறது.
படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அதை வெளியிட்டிருக்கிறார்.
அதன்படி பிகில் படத்தின் தெலுங்குப் பெயர் விசில் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள அந்த ட்வீட்டில் தளபதி விஜய் என்பதில் தளபதி என்பதை ஆங்கிலத்தில் தவறாகப் பதிவிட்டிருப்பதால் பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.











