சினிமா செய்திகள்

தர்பார் கடைசிநாள் படப்பிடிப்பு – நயன்தாராவின் அட்டூழியம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா  உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தர்பார். 

இந்தப்படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு மும்பை உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் நடந்தது.

அக்டோபர் 3 ஆம் தேதி இப்படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு நடந்தது. 

கடைசிநாள் படப்பிடிப்பு என்பதால் வழக்கத்தை விட சற்று முன்பாகவே இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினி ஆகியோர்  படப்பிடிப்புத் தளத்துக்கு வந்துவிட்டார்களாம். 

ஆனால் நாயகியாக நடிக்கும் நயன்தாரா வரவில்லையாம். ஏனென்று கேட்டால், அவருடைய சம்பளத்தில் சில இலட்சங்கள் பாக்கி இருந்திருக்கிறது. அதைக் கொடுத்தால்தான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று விடுதி அறையிலிலேயே இருந்துவிட்டாராம்.

அக்டோபர் 2 வங்கி விடுமுறை என்பதாலும் தொழில்நுட்பச் சிக்கல் காரணமாகவும் தாமதம் ஏற்பட்டது தெரிய வந்ததாம்.
 
அதைச்சொல்லி நயன்தாராவைக் கூப்பிட்டபோதும், பணம் வந்தால்தான் வருவேன் என்று பிடிவாதமாக இருந்தாராம்.
 
ரஜினி வேறு காத்திருக்கிறார். இதனால் மிகவும் கோபமான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், பணத்துக்கு நான் பொறுப்பு என்று சொல்லி படப்பிடிப்புக்கு அழைத்து வந்தாராம். 

பெரிய படம், ரஜினி நாயகன், புகழ்பெற்ற இயக்குநர் , பெரிய நிறுவன தயாரிப்பு ஆகியன இருந்தும் நயன்தாராவின் இந்த பிடிவாதப் போக்கால் அன்று படப்பிடிப்புத்தளம் மிகவும் சூடாக இருந்ததாம்.

உயர்மட்டத்தோடு மறைந்துவிடக் கூடிய இச்செய்தி நயன் தாராவின் தாமதத்தால் படப்பிடிப்புத் தளத்திலும் பரவி எல்லோரும் நயன்தாராவைத் திட்டித்தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.  

Related Posts