சினிமா செய்திகள்

ரஜினியின் அடுத்த படம் – பேச்சுவார்த்தையில் இழுபறி

ரஜினி இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

இதற்கடுத்து  நடிக்கும் படத்தை முடிவு செய்யும் முயற்சியில் இருக்கிறாராம் ரஜினி.

அவர் நடிக்கும் படத்தைத் தயாரிக்க பல தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. 

அதேசமயம் ரஜினி கேட்கும் சம்பளம் பற்றி அறிந்ததும் அந்நிறுவனங்கள் பின்வாங்குகின்றன என்று சொல்கிறார்கள்.

ஏற்கெனவே ஒரு தயாரிப்பு நிறுவனம் ரஜினி கேட்கும் சம்பளத்தைக் கொடுத்து படமெடுத்தால் இறுதியில் நட்டம்தான் என்று பின்வாங்கிக் கொண்டது என்றார்கள்.

இப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்திலும் அதேசிக்கல் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. 

ஏற்கெனவே ரஜினியின் பேட்ட படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் ரஜினியின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறதாம்.

அப்போது சம்பளம் பற்றிய பேச்சின்போது, பேட்ட பட சம்பளத்தைவிட 20 கோடி அதிகம் கொடுக்க வேண்டும் என்று கேட்டாராம் ரஜினி.

அதன்படி பார்த்தால் கிட்டத்தட்ட நூறுகோடியை நெருங்குவதாகச் சொல்லப்படுகிறது.

அவ்வளவு சம்பளம்  கொடுத்துப் படமெடுத்தால் இலாபம் கிடைக்காது என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் யோசனையில் இருக்கிறதாம்.

சம்பள விசயத்தில் ரஜினி இறங்கிவந்தால் அடுத்த பட அறிவிப்பு உடனே வெளியாகும் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts