சிம்பு வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்திய புகைப்படம்
சிம்புவின் திரையுலகப் பயணத்தில் அண்மைக்காலமாகப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் பெரிதாகப் போகவில்லை. நடிக்க ஒப்பந்தமான படங்களும் நடக்கவில்லை.
இப்போது கன்னட மொழிமாற்றுப் படமொன்றில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது.
இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடிப்பதாக இருந்த மாநாடு படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டிருக்கிறார்.
அதன் காரணமாக சொந்தத் தயாரிப்பில் மகாமாநாடு என்கிற படம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படம் நடக்கும் என்கிற எண்ணம் யாருக்குமே இல்லை.
இப்படி தொடர் பின்னடைவுகளில் இருக்கும் சிம்புவின் வாழ்வில் ஒரு புகைப்படம் மூலம் மறுமலர்ச்சி ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

Simbu Family
அண்மையில் சிம்பு குடும்பத்தோடு சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் சிம்புவின் அம்மா அப்பா, தங்கை மற்றும் அவருடைய கணவர், தம்பி மற்றும் அவருடைய மனைவி ஆகியோருடன் சிம்பு இருக்கிறார்.
இப்படம் வெளியானபோது அதைப் பார்த்த சிம்புவின் முன்னாள் காதலி மனமுருகிப் போனாராம். எல்லோரும் ஜோடியாக இருக்கிறார்கள், சிம்பு மட்டும் தனியாக இருக்கிறாரே என்று கலங்கிய அவர், சிம்புவைத் தொடர்பு கொண்டு ஆறுதலாகப் பேசினாராம்.
அந்தப் பேச்சு தொடர்வதாகவும் அது திருமணம் வரை செல்லும் வாய்ப்பு இருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது.
நடந்தால் நல்லதுதான்.











