தனுஷின் குரல்பதிவு நடந்தது – வெடிக்கத் தயாரானது தோட்டா
கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் என்னை நோக்கிப் பாயும் தோட்டாவும் ஒன்று.
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்திருக்கின்றன.
படம் தணிக்கை செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது.
இப்படம் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடக்கின்றனவாம். நாயகன் தனுஷின் குரல்பதிவு மட்டும் கொஞ்சம் பாக்கியிருந்தனவாம்.
நேற்றிரவு அதுவும் நடந்துவிட்டதாம்.தனுஷ் வந்து பேசிக் கொடுத்துவிட்டாராம். இதனால் எல்லாப்பணிகளும் முடிவடைந்து படம் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டதென்கிறார்கள்.











