சினிமா செய்திகள்

விஜய் 64 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சர்கார் படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியானது.அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 24) மாலை 6 மணிக்கு வெளியானது.

தளபதி 64 என்றழைக்கப்படும் அந்தப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன்,படத்தொகுப்பாளராக பிலோமின் ராஜ், சண்டை இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, கலை இயக்குநராக சதீஷ்குமார் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, 2020 கோடை விடுமுறையில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

விஜய்யின் உறவின்ரான சேவியர் பிரிட்டோ இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

பட நிறுவனம் இந்தத் தகவலை அறிவித்தவுடன் படத்தில் பணியாற்றும் அனைவரும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Related Posts