சிவகார்த்திகேயனின் அடுத்த ரிலீஸ் – கசிந்த ரகசியம்
சிவகார்த்திகேயன் இப்போது இன்று நேற்றுநாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம்,இரும்புத்திரை மித்ரன் இயக்கத்தில் ஹீரோ என்கிற படம், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவற்றில் எந்தப்படம் முதலில் வெளியாகும் என்கிற கேள்வி எல்லோருக்கும் இருந்து வந்தது.
அவற்றிற்கு இன்று விடை கிடைத்திருக்கிறது. இயக்குநர்கள் மித்ரன் ரவிக்குமார் , சிவகார்த்திகேயன் ஆகியோரின் ட்விட்டர் உரையாடல் நடந்தது.
அதிலிருந்து முதலில் பாண்டிராஜ் இயக்கும் படம் வெளியாகும் என்பதும் அதற்கடுத்து மித்ரன் இயக்கும் ஹீரோ படம் வெளியாகும் என்றும் தெரியவந்துள்ளது.
ரவிக்குமார் இயக்கும் படத்தில் நிறைய சிஜி வேலைகள் இருப்பதால் நாங்கள் அடுத்த வருடம்தான் வருவோம் என்று ரவிக்குமார் சொல்லியிருக்கிறார்.
ரவிக்குமார் இயக்கும் படம் அறிவியல்புனைகதை என்பதால் சிஜி உட்பட நிறைய தொழில்நுட்ப வேலைகள் இருக்கின்றனவாம். அதனால் அப்பட வெளியீடு அடுத்த வருடத்துக்குப் போயிருக்கிறது என்கிறார்கள்.











