சினிமா செய்திகள்

இந்திப்படத்தில் நடிக்க அஜீத் மறுத்தது எதனால்?

அஜீத் நடித்துள்ள நேர்கொண்டபார்வை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட பதிவில், நேர்கொண்டபார்வை படக்காட்சிகளைப் பார்த்தேன். மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அஜீத் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் விரைவில் நேரடி இந்திப்படத்தில் நடிப்பார் என்று நம்புகிறேன்.

இந்திப்படத்தில் நடிப்பதற்காக 3 ஆக்‌ஷன் கதைகள் கேட்டிருக்கிறார். அதில் ஒன்றையாவது நிச்சய்ம் தேர்ந்தெடுப்பார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இதன்மூலம் அஜீத் நேரடி இந்திப்படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் அதற்கு மாறாக, ஜூலை பத்து அன்று போனிகபூர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், அஜித்குமாரை வைத்து 3 படங்களை தயாரிக்க நான் ஒப்பந்தம் செய்து இருப்பதாகத் தகவல் பரவி வருகிறது. அதில் உண்மை இல்லை. நேர்கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு ஒரு அதிரடிப் படத்தை எடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது. அஜித்குமார் ஒரு இந்தி படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அது இன்னும் முடிவாகவில்லை எனறு சொல்லியிருக்கிறார்.

அஜீத்தை வைத்து இரண்டு படங்கள் தயாரிப்பது என்பது ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம், கூடுதலாக மேலும் ஒரு படம், அதுவும் இந்தியில் எடுக்க போனிகபூர் விரும்பியிருக்கிறார். ஆனால் எனக்கு நேரடி இந்திப்படத்தில் நடிக்க ஆர்வம் இல்லை என்று அஜீத் கூறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதன்காரணமாகவே போனிகபூர் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்றும் சொல்கிறார்கள்.

அஜீத்துக்கு இந்திப்படத்தில் நடிப்பதை விட போனிகபூருடன் தொடர்ந்து பணிபுரிவதில் விருப்பம் இல்லாததாலேயே இவ்வாறு சொல்லிவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts