சினிமா செய்திகள்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய தமிழ்ப்படம்

காஞ்சனா 3 படத்துக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் தமிழில் படம் நடிக்கவில்லை.

காஞ்சனாவின் முதல் பாகத்தை லட்சுமி பாம் என்கிற பெயரில் இந்தியில் இயக்கிக் கொண்டிருக்கிறார். அக்‌ஷய்குமார் கியரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இதனால் ராகவா லாரன்ஸ் அடுத்து நடிக்கப் போகும் படம் பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

நாற்பது கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் ஒரு கதாநாயகனை எப்படி சும்மா விட்டு வைத்திருக்கிறார்கள் என்கிற கேள்வி எல்லோருக்கும் இருக்கிறது.

ஆனால் அப்படி அவர் சும்மா இல்லையாம். தமிழில் அவர் நடிக்கும் படத்துக்கான கதை மற்றும் இயக்குநரைத் தேர்வு செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

லட்சுமி பாம் படத்தின் வேலைகள் முடிவடைந்தவுடன் ராகவாலாரன்ஸ் தமிழில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். அந்தப்படத்தை லிங்குசாமி இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அப்படத்துக்காகத் திரைக்கதை எழுதும் வேலைகளில் லிங்குசாமி இருக்கிறார். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

Related Posts