Uncategorized

புது வீடு வாங்கினார் விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள கொலைகாரன் படம் இப்போது வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.

இந்தப்படத்தை பிரதீப் என்பவர் தயாரித்திருக்கிறார். ஆனால் இதற்கு முன் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வெளியான அண்ணாதுரை, காளி, திமிருபுடிச்சவன் ஆகிய மூன்று படங்களையும் விஜய் ஆண்டனியே தயாரித்திருந்தார்.

அம்மூன்று படங்களுமே சரியாகப் போகாததால் நட்டம் ஏற்பட்டு அதனால் அவருக்குக் கடன் தொல்லையும் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

அதனால் இனிமேல் சொந்தமாகப் படம் தயாரிப்பதில்லை என்று முடிவெடுத்து பிற தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவர் கடனில் சிக்கிக் கொண்டார் அதனால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று உலகம் நினைத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் அவரோ சென்னையின் மையப்பகுதியில் ஒரு புதுவீடு வாங்கிக் குடியேறியிருக்கிறாராம். அந்த வீட்டின் விலை சுமார் பதினைந்து கோடி என்கிறார்கள்.

தமிழ்த்திரையுலகில் தயாரிப்பாளராக இருப்பது மட்டும் தான் கஷ்டம் போலிருக்கிறது.

Related Posts