சினிமா செய்திகள்

சூப்பர்குட் பிலிம்ஸின் 100 ஆவது படத்தில் விஜய்

விஜய் இப்போது அட்லீ இயக்கத்தில் ஒரு படம் நடித்துக்கொண்டிருக்கிறார். விஜய் 63 என்று அழைக்கப்படும் அந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இப்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்தப்படத்தில் வில்லனாக இந்தி நடிகர் ஜாக்கிஷெராஃப் நடிக்கிறார் என்று மார்ச் 21 அன்று அறிவித்தார்கள்.

இந்தப்படம் 2019 தீபாவளி நாளில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் உலவுகிறது.

பூவே உனக்காக, லவ்டுடே, துள்ளாத மனமும் துள்ளும்,திருப்பாச்சி ஆகிய விஜய்யின் பெரிய வெற்றிப் படங்களைத் தயாரித்த ஆர்.பி.செளத்ரி, விஜய்யைச் சந்தித்து, எங்கள் நிறுவனம் நூறாவது படத்தைத் தயாரிக்கவிருக்கிறது. அந்தப்படத்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று கேட்டாராம்.

அதனால் அதற்கு உடனே சம்மதம் சொல்லிவிட்டாராம் விஜய். இயக்குநர் யார் என்பது சில நாட்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள்.

யார் இயக்குநராக இருந்தாலும் விஜய்யின் 64 ஆவது படத்தைத் தயாரிக்கவிருப்பது சூப்பர்குட் பிலிம்ஸ் என்பது உறுதியாம்.

Related Posts