மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் பழுவேட்டரையர் இவர்தான்
செக்கச்சிவந்தவானம் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்குகிற படத்திலும் நிறைய நடிகர்கள்.
விக்ரம், கார்த்தி, சிம்பு,ஜெயம்ரவி,விஜய்சேதுபதி என எல்லா நடிகர்களின் பெயர்களும் அடிபடுகின்றன.
ஆனால் இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் யாரும் சம்பந்தப்பட்ட எதையும் வெளியில் சொல்லவில்லை.
மணிரத்னமும் எதைப்பற்றியும் பேசாமல் இருப்பதையே ஒரு உத்தியாகக் கடைபிடிக்கிறார்.
இந்நிலையில், மணிரத்னம் படத்தில் நடிக்க சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.
பொன்னியின்செல்வன் கதையில் வருகிற பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.
எப்போது இந்தப் படத்தை எடுத்தாலும் இந்த வேடத்தில் சத்யராஜ்தான் இருக்கவேண்டும் என்று மணிரத்னம் உறுதியாக இருந்தாராம். அவர் நினைத்தபடியே இப்போது ஒப்பந்தம் நடதுவிட்டது என்று சொல்கிறார்கள்.











