சினிமா செய்திகள்

சிவகார்ததிகேயன் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் மே ஒன்றாம் தேதி வெளியாகவிருக்கும் படம் மிஸ்டர் லோக்கல்.

எம்.ராஜேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்போது ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார்.

அடுத்து,‘இரும்புத்திரை’ பி.எஸ்.மித்ரன் இயக்கிவரும் ஹீரோ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்ப மார்ச் 13 தொடங்கியது.

ஹீரோ படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் இவானா என இரண்டு பேர் நடிக்கின்றனர். முக்கியக் கதாபாத்திரத்தில் அர்ஜுன், ரோபோ சங்கர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாகச் சொல்லப்
படுகிறது.

Related Posts