இந்தத் தருணத்திற்காக ஏங்கினேன் – கலங்கிய அருண்விஜய்
மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் நடித்த தடம் மார்ச் 1 ஆம் தேதி வெளியானது.
அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவு அருண்விஜய் படங்களின் தமிழக வசூல் அதிகரித்துள்ளது. சுமார் எட்டுகோடி தமிழக வசூல் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இரண்டு வாரங்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அந்தப் படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் கொண்டாடியிருக்கிறார்கள்.
சென்னையில் மார்ச் 13 இர்வு ஒரு தனியார் விடுதியில் நடந்திருக்கிறது.
நிகழ்வில் நாயகன் அருண்விஜய் இயக்குநர் மகிழ்திருமேனி நடிகர் ஃபெப்சி விஜயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய அருண்விஜய், சினிமா குடும்பத்தில் இருந்து வந்தாலும் எனக்கு உடனே வெற்றி கிடைக்கவில்லை. இவன் வேலைக்கே ஆக மாட்டான் என்று பலர் என் காதுபடவே பேசியிருக்கிறார்கள்.
விடாமுயற்சியோடு பல்லாண்டுகள் போராடினேன். இவ்வளவு ஆண்டு போராட்டத்துக்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது.
இப்படி ஒரு தருணம் என் வாழில் வராதா என்று ஏங்கினேன், இப்போது அது நடந்துவிட்டது, இதற்காக உழைத்த இயக்குநர் மகிழ்திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் என் நெஞ்சாந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
என்று கண்கலங்கியபடி பேசியிருக்கிறார். அவருடைய இந்தப்பேச்சால் அரங்கம் உணர்ச்சி ததும்ப அமர்ந்திருந்தது..











