சினிமா செய்திகள்

மதம் மாறினார் சிம்புவின் தம்பி – டி.ராஜேந்தர் சம்மதம்

இயக்குநர் நடிகர் டி.ராஜேந்தரின் இளைய மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன் தன் பெற்றோர் முன்னிலையில் இன்று இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.

தந்தை டி.ராஜேந்தர் இயக்கிய ‘சொன்னால்தான் காதலா’, ‘காதல் அழிவதில்லை’ உள்ளிட்ட சில படங்களில் சிறுவனாக நடித்தவர் குறளரசன்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு இசையமைத்தார்.

இந்நிலையில் தன் பெற்றோர் டி.ராஜேந்தர் – உஷா முன்னிலையின் குறளரசன் இன்று இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.

குறளரசன் இஸ்லாம் குருமார்கள் அருகில் அமர்ந்த படி இஸ்லாம் மதத்தை ஏற்ற காணொலிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

சிம்பு இந்து ஆன்மீக வழியில் செல்வதாகச் சொல்பவர். சிம்புவின் சகோதரி கிறித்தவ மதத்தைப் பின்பற்றுகிறார். சிம்புவின் சகோதரர் குறளரசன் தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.

இதுகுறித்து டி.ராஜேந்திர்கூறும் போது, எம் மதமும் சம்மதம், ஒன்றே குலம் ஒருவே தேவன் என்ற கொள்கையை கடைப்பிடிப்பவன் நான். குறளரசன் இஸ்லாம் மதத்தில் சேர்ந்துள்ளார். என் மகனின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்துள்ளேன்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Posts