மகிழ்திருமேனி அஜீத் மணிரத்னம் – தடம் விழாவில் அருண்விஜய் நெகிழ்ச்சி
தடையறத்தாக்க படத்தில் இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்திருந்தார் அருண்விஜய். அப்படம் வெற்றி பெற்றதோடு அருண்விஜய்க்கு மிகுந்த நற்பெயரையும் பெற்றுத்தந்தது. அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் படம் `தடம்’.
இந்தர்குமார் தயாரிப்பில் அருண்விஜய் நாயகனாக நடிக்க, நாயகிகளாக தான்யா,வித்யா, ஸ்மிருதி ஆகியோரும், சோனியா அகர்வால், யோகிபாபு உட்பட பலரும் நடித்திருக்கிறார்கள்.
கோபிநாத் ஒளிப்பதிவில், புது இசையமைப்பாளர் அருண்ராஜ் இசையமைத்திருக்கும் அப் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது.
அப்போது பேசிய இயக்குநர் மகிழ்திருமேனி, தடையறத் தாக்க படத்தில் அருண்விஜய்யின் நடிப்பை மிகவும் பாராட்டினர். இந்தப் படம் அருணை அதையும் தாண்டிய ஒரு இடத்துக்கு எடுத்துச் செல்லும். அவரின் திறனை வெளிக்கொண்டு வரும் சரியான இயக்குநர்கள் அடுத்தடுத்து அமைந்தால், அருணை அடையாளம் காட்ட முடியும். அவர் இயக்குநர்களின் நடிகர் என்றார்.
நடிகர் அருண் விஜய் பேசும்போது…..,
`தடையறத் தாக்க’ திரைப்படம் என் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. அதற்குப் பிறகு நல்ல வளர்ச்சி இருந்தது. அஜீத்துடன் என்னை அறிந்தால், குற்றம் 23, மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் என்று வரிசையாக வெற்றிப்படங்கள் அமைந்தன.
இந்தப் படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறேன். மகிழ் சார் கதை சொல்ல ஆரம்பிக்கும்போது, முதலில் இதில் இரட்டை வேடம் என்று சொல்லவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகக் கதைக்குள்ள போகும்போதுதான் தெரிந்தது.அதேமாதிரி, இவர்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் இருக்கு. முதல்ல கதை சொல்லும்போது க்ளைமாக்ஸை சொல்லலை. நாளைக்குப் பார்க்கலாம் அருண்னு கூலா சொல்லிட்டுப் போயிட்டார். எனக்கு சஸ்பென்ஸ் தாங்கலை. படம் பார்க்கும்போது உங்களுக்கும் அந்த எதிர்பார்ப்பு வரும்.
படம் சிறப்பாக வந்திருக்கிறது, மார்ச் மாதம் படத்தை வெளியிடுகிறோம் என்றார் அருண்விஜய்.











