விஜய் 63 இல் இணையும் இன்னொரு கதாநாயகன்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 ஆவது படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நகைச்சுவை நடிகர்கள் விவேக் மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.
ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார்.
இதன் படப்பிடிப்பு வருகிற 20 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.
விளையாட்டுத் துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில், பரியேறும் பெருமாள் படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கதிர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிரார்.
இந்தத்தகவலை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.











