சினிமா செய்திகள்

அடங்கமறு வெற்றியால் ஜெயம்ரவிக்குக் கிடைத்த உடனடிப் பலன்

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் செக்கச்சிவந்த வானம். பிரகாஷ்ராஜ், அரவிந்தசாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல முன்னணி நடிகர், நடிகைகளை படத்தில் நடிக்க வைத்து இருந்தார்.

அதனால் அந்தப்படம் வெற்றி பெற்றதோடு படத்தில் நடித்த அனைவருக்கும் பெயர் வாங்கிக் கொடுத்தது.

இதனால் அடுத்தும் பல நடிகர்களை வைத்துப் படமெடுக்கவிருக்கிறார் மணிரத்னம்.

இம்முறை அவர் ‘பொன்னியின் செல்வன்’ கதையைக் கையில் எடுத்து இருக்கிறார்.

இந்தப்படத்தில் விக்ரம், சிம்பு ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்கிறார்கள். அவர்களோடு ஜெயம் ரவி அல்லது விஜய் தேவரகொண்டா ஆகியோரில் யாராவது ஒருவரை நடிக்க வைக்கத் திட்டமிட்டு வருகிறார் என்று சொல்லப்பட்டது.

அண்மையில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான அடங்கமறு வெற்றி என்றவுடன், ஜெயம்ரவியைத் துரத்திப் பிடித்துவிட்டாராம் மணிரத்னம். ஆகவே மணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஜெயம்ரவி நடிப்பது உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.

Related Posts