செய்திக் குறிப்புகள்

மலேசியாவில் பேட்ட எவ்வளவு வசூல் செய்யும் தெரியுமா? – அதிர வைக்கும் விநியோகஸ்தர்

கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

இப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவைத் தவிர உலகமெங்கும் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது.

இந்நிறுவனத்தின் விளம்பர யுக்தியைக் கண்டு உலக மக்கள் பலரும் வியந்து போய் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ‘ட்ரிப்ட் சேலஞ்ச் 2018’ (DRIFT Challenge 2018) கார் ரேசில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட கார் வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்தது.

மேலும் மலேசியாவில் பல கார்களில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அதுபோல் பேருந்துகளில் ஒட்டப்பட்ட போஸ்டர் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது மலேசியாவின் முக்கிய வீதிகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வீடியோக்கள் ஒளிபரப்பப் பட்டு வருகிறது.

இது ரஜினி ரசிகர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற ரசிகர்களிடையும் அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மலேசியாவில் இதுவரைக்கும் யாரும் செய்யாத அளவிற்கு ‘பேட்ட’ படத்தின் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.

மலேசியாவில் திரைப்படத் துறையில் முத்திரை பதித்து வரும் மாலிக் ஸ்டிரீம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தின் 23 ஆவது திரைப்படமான “பேட்ட” 3 கோடி வெள்ளிக்கு வசூல் சாதனை படைக்கும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அப்துல் மாலிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் 3 கோடி வெள்ளி என்றால் இந்திய மதிப்பில் சுமார் 52 கோடி என்கிறார்கள். இந்தக் கணக்கு அனைவர்ரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts