ரஜினியின் 2.ஓ நான்கு நாள் வசூல் – ஏ.ஆர். ரகுமான் வெளியிட்ட ஆச்சர்ய தகவல்
ரஜினியின் 2.ஓ படம் நவம்பர் 29 ஆம் தேதி வெளியானது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுக்க இந்தப்படம் வெளியானது.
கடந்த நான்கு நாட்கள் வசூலில் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
உலக அளவில் ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் என்கிற படம் முதலிடத்தில் இருந்ததாகவும் அந்தப்படத்தின் வசூலை முறியடித்து இந்தப்படம் முதலிடம் பிடித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
நான்கு நாட்களில் நானூறு கோடி வசூலித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
இந்தத் தகவல் வெளியான செய்தி இணைப்பை தன் டிவிட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டிருக்கிறார்.
பொதுவாக வியாபாரம் தொடர்பான விசயங்களிலிருந்து ஒதுங்கியிருக்கும் ஏ.ஆர்.ரகுமான் இந்தத் தகவலை வெளியிட்டிருப்பது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.











