தன்னைப் பற்றிய சர்ச்சைச் செய்திக்கு காயத்ரி ரகுராம் விளக்கம்
2002 ஆம் ஆண்டு வெளிவந்த சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் காயத்ரி ரகுராம்.
அதன்பின், ஸ்டைல், பரசுராம், விசில், விகடன், வை ராஜா வை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். நடன இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மேலும் பிரபலமானார். அதிலிருந்து அவருக்கு நிறையத் தொல்லைகளும் வருகின்றன.
இந்நிலையில்,நேற்று முன்தினம் சென்னை திரு.வி.க.பாலம் பகுதியில் அபிராமபுரம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நடிகை காயத்ரி ரகுராம் மதுபோதையில் கார் ஓட்டியது தெரியவந்தது.
இதனையடுத்து மதுபோதையில் கார் ஓட்டியதாக நடிகை காயத்ரி ரகுராம் மீது அபிராமபுரம் போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரூ 3500 அபராதம் விதித்தனர்.
இப்படி ஒரு செய்தி ஊடகங்களில் வெளியானது. அதுபற்றி ட்விட்டரில் அவரிடமே இதுகுறித்து பலர் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்துள்ள அவர், என்னைப் பற்றி ஏன் இப்படி செய்திகள் வருகின்றன என்றே எனக்குப் புரியவில்லை. நான் இரண்டு நாட்களாக உடல்நலமின்றி இருக்கிறேன், என்னைப் பற்றி ஏதாவது செய்தி வெளியிடவேண்டுமென்றால் என்னிடமும் அதுபற்றிக் கேட்டுவிட்டு வெளியிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.











