சினிமா செய்திகள்

டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்குகிறது இந்தியன் 2

நவம்பர் 29 ஆம் தேதி வெளியீடு என்பதால் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

ஒரு பக்கம் பின்னணி இசைச் சேர்ப்பு, இன்னொரு பக்கம் விஎஃப்எக்ஸ் வேலைகள் மறுபக்கம் 3டி வேலைகள் ஆகியன சுற்றிச் சுற்றி நடந்துகொண்டிருக்கின்றன.

இவை எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இயக்குநர் ஷங்கர் பம்பரம்போல் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

இதற்கு நடுவில், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் வேலைகளும் நடந்துகொண்டிருக்கின்றன.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே திட்டமிட்டபடி டிசம்பர் 14 அன்று தொடங்கவிருக்கிறதாம்.

அப்படத்தில் கமலுடன் அக்‌ஷய்குமார், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts