விஜய்யின் அடுத்த பட விசயத்தில் குழப்பம் ஏற்பட என்ன காரணம்?
விஜய் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. நவம்பர் 6 தீபாவளியன்று படத்தை வெளியிட வேகமாக வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில், அடுத்து ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – அட்லீ கூட்டணி இணையப் போவதாகவும், இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக இயக்குநர் அட்லீக்கு முன் தொகை கொடுத்து அவருக்கு அலுவலகம் கொடுத்து பட வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ அர்ச்சனா கல்பாத்தி, விஜய் சாரின் அடுத்த படத்தை நாங்கள் தயாரிப்பதாக பொய்யான விஷயங்கள் வெளியாகியுள்ளன.
விஜய் சாரை வைத்துப் படம் தயாரிப்பது என்பது எங்கள் கனவு. எப்போதுமே அது எங்கள் விருப்பமாக இருக்கிறது. எனவே, விரைவில் அப்படியொரு விஷயம் நடக்கும் என எதிர்பார்க்கிறோம், அதற்காகக் காத்திருக்கிறோம். என்று சொல்லியிருக்கிறார்.
இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எல்லா விசயங்களும் பேசி முடித்த பிறகு இப்போது திடீரென் ஏஜிஎஸ் நிறுவனம் இப்படி சொல்வது ஏன்?
விஜய் சொல்லித்தான் அட்லியை ஒப்பந்தம் செய்து அவருக்காக ஏஜிஎஸ் நிறுவனம் செலவு செய்துகொண்டிருக்கிறது. அந்நிலையில், அட்லி சொன்ன கதையில் சிக்கல் இருக்கிறதென்றும் அதைச் சரி செய்துகொண்டு அறிவிப்பு செய்யலாம் என்று விஜய் நினைத்ததால் தயாரிப்புத் தரப்பிலிருந்து இப்படி ஒரு அறிவிப்பு வந்திருக்கிறதென்று சொல்லப்படுகிறது.
கதை விசயம் சரியாக அமையவில்லையென்றால் இயக்குநரை மாற்றி அறிவிக்கும் வாய்ப்பும் இருக்கிறதென்கிறார்கள்.
இவை திரையுலகில் உலாவரும் செய்திகள். இவற்றின் உண்மைத்தன்மையை சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே உறுதி செய்ய இயலும்.











