சினிமா செய்திகள் நடிகர்

கே.வி.ஆனந்த் படத்தில் சூர்யாவின் தோற்றம் வெளியானது

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என் ஜி கே படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் புதிய படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்போதைக்கு சூர்யா 37 என்று அழைக்கப்படுகிறது.

இந்தப்படத்தில் நாயகியாக சாயிஷாவும் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் மோகன்லால், இந்தி நடிகர் பொம்மன் இரானி, ஆர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஜூன் 23 அன்று இலண்டனில் தொடங்கியது இப்படத்தின் படப்பிடிப்பு.

இப்போது குலுமணாலியில் நடந்துகொண்டிருக்கிறது. அங்கு திலீப்சுப்பராயன் சண்டைப் பயிற்சியில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

இந்நிலையில், திலீப்சுப்பராயனின் பிறந்தநாள் அங்கு கொண்டாடப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சூர்யா இருக்கிறார். இதன்மூலம் அவருடைய புதிய தோற்றம் வெளியாகியிருக்கிறது எனலாம்.

Related Posts