சினிமா செய்திகள் நடிகர்

சிம்பு படத்தில் பிக்பாஸ் நாயகிகள்?

பிக்பாஸ் வீட்டில் இருந்து மகத் வெளியேறியபோது நேரில் சென்று வரவேற்றார் சிம்பு. அதன்பின் சென்றாயன் வெளியேறியபோதும் அவரை சந்தித்தார்,

சென்றாயன் திரும்ப விருந்தாளியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது ஐஸ்வர்யாவிடம், ‘எதைப் பத்திக் கவலைப்படாதே ஐஸூ. உனக்கெல்லாம் எவ்ளோ நல்லபேரு தெரியுமா?’ என்று சொல்ல அழுதேவிட்டார் ஐஸ்வர்யா.

அதன் பிறகு, ‘நேத்திக்கி சிம்புவைப்பாத்தேன். உன்னை ரொம்ப விசாரிச்சாரு’ என்று சென்றாயன் சொன்னதும் மகிழ்ந்து போனார் ஐஸ்வர்யா. ‘இன்னொரு விஷயம் சொல்றேன். சிம்பு அடுத்த படம் பண்றாரு. அதுல நீதான் ஹீரோயின். சிம்புவே சொல்லிட்டாரு’ என்று சொல்ல ஆனந்தத்தில் திக்குமுக்காடிப் போனார் ஐஸ்வர்யா.

இதெல்லாம் இருக்க, பிக்பாஸ் முடிந்து எல்லோரும் சகஜநிலைக்குத் திரும்பியிருக்கும் நிலையில், ஜனனி நேற்று டிவிட்டரில் சில படங்களைப் பதிவிட்டுள்ளார்.

சிம்புவுடன் ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா ஆகியோர் நிற்க அவர்களுடன் மஹத், ஹரீஷும் நிற்கின்றனர். எல்லோரும் சேர்ந்து செக்கச்சிவந்த வானம் படம் பார்க்கப் போவதைக் குறிப்பிட்டு ஜனனி, பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்க்கும்போது சிம்பு படத்தில் இவர்கள் நடிக்கப் போகிறார்கள் என்கிற செய்திகளும் ரெக்கை கட்டிப் பறந்துகொண்டிருக்கிறது.

Related Posts