சீமராஜா படத்தின் முன்னோட்டம் எப்படி?
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் சீமராஜா படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.
எங்க ராசா எப்படி வருவாரு தெரியுமா? என்று குரல் கேட்க இரட்டைக்குதிரை பூட்டிய சாரட் வண்டி ஆக்ரோஷமாக வருகிறது.அதைத் தொடர்ந்து கோயிலில் சிவகார்த்திகேயனுக்குப் பட்டம் கட்ட அவர் சிரித்துக் கொண்டே வணங்குகிறார். உடனே வாரேன் வாரேன் சீமராஜா பாடலில் சிவகார்த்திகேயன் தோன்றுகிறார்.
நகைச்சுவைக்கு சூரி, வில்லன்களாக லால், நெப்போலியன் ஆகியோருடன், சேலை கட்டிய சண்டியராக சிம்ரன் ஆகியோர் வருகிறார்கள்.
டீச்சர் நம்மள பாக்குதா? என்று சிவகார்த்திகேயன் கேட்க, சமந்தா அறிமுகம். அவரோடு காதல் மட்டுமல்ல மோதலும் இருக்கிறது .
அதிரடியான சண்டைக் காட்சிகளும் இருக்கின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக படு ஸ்டைலாக வந்து நின்று, இதுவரைக்கும் என்னை சீமராஜாவாகத்தானே பாத்திருப்ப, இனிமே ராஜாதிராஜாவா பார்ப்பே என்று சிவகார்த்திகேயன் சொல்ல ஆவேசமாகப் போரிடும் மன்னராக மின்னல்போல் வந்து போகிறார் சிவகார்த்திகேயன்.
நகைச்சுவை, காதல் , சண்டை ஆகியனவற்றோடு மன்னராகவும் தோன்றி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது சீமராஜா முன்னோட்டம்.











