தள்ளிப் போனது சூர்யா படம் – ரசிகர்கள் அதிர்ச்சி
சூர்யா நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘என்.ஜி.கே’. ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி ஆகிய இரண்டு நாயகிகள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
ஜெகபதி பாபு, இளவரசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இப்படத்துக்கு, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரிக்கின்றனர். வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இப்படம் தீபாவளியன்று வெளியாகாது என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
படத்தின் வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருப்பினும் தீபாவளிக்குள் எல்லாவற்றையும் முடித்து வெளியிட முடியாதென்பதால் தள்ளி வைத்திருக்கிறார்கள்.
எப்போது வெளியீடு என்பதை விரைவில் அறிவிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
எதிர்பாரா இந்த அறிவிப்பால் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்,











