சினிமா செய்திகள் நடிகர்

விஜய் அஜித் எங்கே? – மனம் புழுங்கும் கேரள மக்கள்

கேரளாவில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு காரணமாக அம்மக்களின் நிவாரணத்துக்காக நிதி உதவி செய்யுங்கள் என்று கேரள முதல்வர் பினராயிவிஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனால் பலரும் கேரளாவுக்கு உதவி வருகிறார்கள். இந்நிலையில்,
திரையுலகப் பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

கமல்ஹாசன் 25 இலட்ச ரூபாய், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 25 இலட்ச ரூபாய், விஷால் 10 இலட்ச ரூபாய், ஸ்ரீபிரியா 10 இலட்ச ரூபாய், தென்னிந்திய நடிகர் சங்கம் 5 இலட்ச ரூபாய், ரோகிணி 2 இலட்ச ரூபாய் வழங்கியுள்ளனர்.

மேலும், விஜய் சேதுபதி 25 இலட்ச ரூபாய், தனுஷ் 15 இலட்ச ரூபாய், சித்தார்த் 10 இலட்ச ரூபாய், நயன்தாரா 10 இலட்ச ரூபாய், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் 25 இலட்ச ரூபாய், இயக்குநர் ஷங்கர் 10 இலட்ச ரூபாய் அளித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் 15 இலட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விக்ரம் தனது பங்களிப்பாக ரூபாய் 35 இலட்சம் கொடுத்துள்ளார்.

தமிழின் முன்னணி நடிகர்கள் மட்டுமின்றி தெலுங்கின் முன்னணி நடிகர்களும் நிதி கொடுத்து வருகின்றனர்.

ஆனால் இதுவரை விஜய், அஜித் ஆகியோர் இதுகுறித்து எதுவும் பேசவில்லை. இவர்களுடைய படங்களை ஐந்து கோடி ஆறு கோடி கொடுத்து வாங்கி கேரளாவில் வெளியிடுகிறார்கள்.

அந்த அளவு இவர்களை மதிக்கும் கேரள மக்களை இவர்கள் மதிக்கவில்லை என்பது வருந்தத் தக்கது.

Related Posts