சினிமா செய்திகள் நடிகர்

கேரளாவுக்கு 25 இலட்சம் நிவாரணநிதி – முதலில் அறிவித்த சூர்யா

கேரளாவில் வரலாறு காணாத மழையால் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர்.

கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்புப்பணிகளை மேற் கொண்டு வருகிறது இந்நிலையில் கேரளா முதல்வர் பினராயிவிஜயன், இயன்றோர் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதை அறிந்ததும் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 25 லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குகிறார்கள்.

எப்பொழுதும் சூர்யா கார்த்திக்கு கேரளா மக்களிடம் ஒரு தனி அன்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது, எனவே கேரள முதல்வர் வேண்டுகோள் விடுத்ததும்முதலில் 25 இலட்சம் தருவதாக அறிவித்திருக்கிறார்கள்.

மேலும், கடவுளின் தேசம் என்று புகழப்படும் கேரளாவில் இந்நிலையை கண்டு மனம்வருந்துகிறோம், வெகுவிரைவில் இயல்புநிலை திரும்பப் பிராதிக்கிறோம் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

Related Posts