சினிமா செய்திகள் நடிகை

இதற்குமா திட்டுவார்கள்? – காயத்ரி ரகுராம் வேதனை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதிலிருந்து நடிகை காயத்ரி ரகுராமுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு இருந்துகொண்டிருக்கிறது.

அவர் எது சம்பந்தமாகக் கருத்து சொன்னாலும் அதற்கு எதிராகக் கருத்துகளைப் பதிவார்கள்.

அவர் இன்று காலையில்,திமுக தலைவர் கலைஞரின் உடல்நலம் சீராக இறைவனை வேண்டுகிறேன் எனும் பொருள்பட, மை பிரேயர்ஸ் டூ, கலைஞர் அய்யா ஹெல்த் என்று ட்வீட் போட்டிருந்தார்.

இதற்கும் எதிர்ப்பு வந்திருக்கிறது. ஒருசிலர் நல்ல விசயம் என்று வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர். இருந்தாலும்,

எதுக்கும்மா இந்த பப்ளிசிடி என்றும் முடிஞ்சது இனி கண்டிப்பா சங்குதான் என்றும் எதிர்க் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

மோசமான சொற்களையும் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு பிக்பாஸ் நிகழ்ச்சியால் காயத்ரி ரகுராம், நல்ல விசயம் செய்தால் கூட அதற்கு எதிர்ப்பு வருவது அதிர்ச்சியாக இருக்கிறது.

படிக்கிறவர்களுக்கே கஷ்டமாக இருக்கும் போது சம்பந்தப்பட்ட அவர் எவ்வளவு வேதனைப்படுவார் என்று அவருடைய ஆதரவாளர்கள் கேட்கிறார்கள்.

Related Posts