சினிமா செய்திகள்

கலைஞர் உடல்நிலை – பா.விஜய் படவிழா ஒத்திவைப்பு , பதட்டம் அதிகரிப்பு

பா.விஜய் எழுதி இயக்கி நடித்துள்ள படம் ஆருத்ரா. இந்தப்ப படத்தின் பாடல் வெளியீட்டுவிழா ஆகஸ்ட் 7 ஆம் தேதி மாலை சென்னையில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது .

இந்நிலையில். திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் மிகவும் மோசமடைந்திருப்பதாகச் சொல்லப்பபட்டது.

அதன் காரணமாக,எமது தமிழினத் தலைவர் உடல் நிலை குறித்த தகவல்களை கருத்தில் கொண்டு நாளை நடைபெறவிருந்த ஆருத்ரா இசை வெளியீட்டு விழாவை ஒத்தி வைக்கிறோம்
– பா.விஜய்

என்று அறிவித்திருக்கிறார் பா.விஜய்.

நாளை மாலை நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை ஒத்திவைக்கும் அறிவிப்பு இப்போதே வெளியானதால் பதட்டம் அதிகரித்திருக்கிறது.

Related Posts