யுவன்ஷங்கர்ராஜாவுக்கு இவ்வளவு செல்வாக்கா? – ஆச்சரியத்தில் திரையுலகம்
இளன் என்கிற இயக்குநர் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் மற்றும் ரைசா நடித்திருக்கும் படம் பியார் பிரேமகாதல்.
இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா இந்தப்படத்தின் தயாரிப்பாளர்.
இந்தப்படத்தின் இசை வெளியீட்டுவிழா அண்மையில் நடந்தது.
விழாவில், இளையராஜா, சிம்பு, தனுஷ், விஜயசேதுபதி, அமீர், சீனுராமசாமி, அகமது,ராம்,படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண், நாயகி ரைசா,இயக்குநர் இளன், ஜெயம் ரவி, ஆர்யா, கிருஷ்ணா, சாந்தனு, வசந்த் ரவி, நடிகைகள் ரேகா, பிந்து மாதவி, இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன், இமான், சாம் சி.எஸ் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
தனியார் தொலைக்காட்சி இந்த நிகழ்வை நடத்தினாலும், நிகழ்ச்சிக்கு விருந்தினர்களை அழைத்தது யுவன்ஷங்கர்ராஜா.
அவர் கூப்பிட்டதால் இவ்வளவு பேரும் கலந்துகொண்டனர். இதன்மூலம் அவருக்கு இருக்கும் செல்வாக்கைக் கண்டு திரையுலகம் வியப்பில் ஆழ்ந்திருக்கிறது.











