சினிமா செய்திகள்

விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவரா ஏ.ஆர்.ரகுமான்?

சன் பிகசர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் வேலைகள் வேகமாக நடக்கின்றன.

இந்நிலையில் அனைத்துப் பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதவிருக்கிறார்.

மெர்சல் படத்தைத் தொடர்ந்து, விஜய் – ஏ.ஆர்.ரஹ்மான் – விவேக் கூட்டணி ‘சர்கார்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. இதிலும் அனைத்துப் பாடல்களையும் இவரே எழுதவிருக்கிறார். இந்தத் தகவலை தன் ட்விட்டர் பக்கத்தில் விவேக் பதிவிட்டார்.

உடனே உள்ளே வந்த விஜய் ரசிகர்கள்,

தோழர் தளபதியோடு பழைய படத்தில் உள்ள ஓப்பனிங் பாடல்கள் ரொம்ப தத்துவமாக இருக்கும்.சர்காரில் அது மாதிரி எழுதுங்க like Thirupachi,sivakasi, Pokkiri,ATM,Villu, Vettaikaran,Sura.சமீபத்திய படங்களில் யாரும் அப்படி எழுதுறதில்லை except puli,mersal Alaporan song

@Lyricist_Vivek தோழர் இந்த மாதிரி எழுதுங்க .. துப்பாக்கி கத்தி யில் இந்த மாதிரி பாடல் வரிகள் இல்லை… கொஞ்சம் கவனிக்கவும்

என்று பின்னூட்டங்கள் இட்டிருக்கிறார்கள்.

போக்கிரி, வில்லு, வேட்டைக்காரன் உள்ளிட்ட விஜய்யின் பல படங்களில் அவருடைய அறிமுகப் பாடலில் சமுதாய அக்கறையுடன் பல கருத்துகள் இருக்கும்.

அந்த வரிகளைப் பயன்படுத்தி சுவரொட்டிகள், விளம்பரப் பதாகைகளை விஜய் ரசிகர்கள் அமைத்து வருகிறார்கள்.

இந்தப்படத்திலும் அதுபோலவே விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிகிறது.ஏ.ஆர்.ரகுமானும் பாடலாசிரியர் விவேக்கும் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்களா?

Related Posts