ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் பட்டபாடு
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் ஏழாம் அறிவு, துப்பாக்கி ஆகிய படங்களில் உதவியாளராகப் பணியாற்றிய ஹர்ஷவர்தன் எழுதி இயக்கும் படம் சைனா.
கலையரசன், ரிதுவர்மா உள்ளிட்ட பலர் நடிக்கும் அந்தப்படம் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்தப்படத்தின் கதையைக் கேட்டுவிட்டு மிகச்சிறப்பாக இருக்கிறது என்று சொல்லி படத்தைத் தொடங்கிய தயாரிப்பாளர், பாதியிலேயே விட்டுவிட்டுப் போய்விட்டாராம்.
நடிகர்களுக்கோ மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுக்கோ இதனால் பெரிய பாதிப்புகள் இல்லை.
ஆனால் படத்தின் இயக்குநர் அதுவும் முதல்பட இயக்குநர் எனும்போது, அந்தப்படம் பாதியில் நின்றால் அந்த இயக்குநருடைய மொத்த வாழ்க்கையுமே முடிவுக்கு வந்தது போல் ஆகிவிடும்.
இந்தப்பட இயக்குநர் ஹர்ஷவர்தனுக்கும் அதுதான் நிலைமை என்றாலும் கல்ங்காமல், போராடி படத்தை அவரே பொறுப்பேற்றுக் கொண்டு, படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டாராம்.
படத்தின் கதைக்களமும் பாடல்களும் சிறப்பாக அமைந்திருப்பதால், அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நிதானமாக முன்னேறுகிறதாம்.
ஒரு படைப்பாளிக்கு தன் படைப்பின் மீது முழு நம்பிக்கை இருந்தால் அதை எப்பாடுபட்டாவது மக்கள் பார்வைக்குக் கொண்டுவந்துவிடுவார் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தப்படம் விளங்கும் என்கிறார்கள்.











