சினிமா செய்திகள் நடிகர்

பாலியல் குற்றத்தை விமர்சிக்கும் தகுதி பார்த்திபனுக்கு இருக்கிறதா? – புதிய சர்ச்சை

சென்னை அயனாவரத்தில் மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்திய 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் நடிகர் பார்த்திபன், இந்நிகழ்வு குறித்த செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.

அதில்….

அறுத்தெறியுங்கள்!!!
————————————–
இந்த நிமிடம்
இதே மணிக்கு
இங்கோ அங்கோ எங்கோ
ஒரு பாலியல் வன் கொடுமை
நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது …
அதுவும் தொலைக்காட்சியில் இன்றைய
நிகழ்வை பார்த்தபடி!!!
அதை தடுப்பது எப்படி?
ஏனெனில்,
போன வாரம்
போன மாதம்
போன வருடம்
வேறு ஒரு சிறுமியின் உறைந்த ரத்தத்தின் மீது ஈனஸ்வரத்தில் நம் துயர், ஈக்களாய் மொய்த்துக் கொண்டிருக்கையில்
இந்த 17-ம், இன்னும் சில மிருகங்களும்
செவி திறனற்ற ஒரு சங்கு புஷ்பத்தினை
பிய்த்தெறிந்து கொண்டிருந்தனர்.
எனவே
நம் கண்களையும் காதுகளையும்
கூர்மையாக்கி, _______- க்கு அலையும்
மனுஷ ப்ராணிகளை கண்டறிந்து
காயடிக்க வேண்டும்!

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனம் வந்திருக்கிறது.

அவற்றில் ஒன்று….

சென்னையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் , நடிகர் பார்த்திபன் குற்றம்சாட்டப்பட்டுள்ள 17 பேரின் ஆண் உறுப்பை அறுத்து எறிய வேண்டும் என கேட்டுள்ளார்.

இவர் ஒரு படத்தில் ( நடிகை ஐஸ்வர்யா என்று நினைக்கிறேன் ) , பெண்களின் மார்பகங்கள் கசக்குவதற்காக மட்டுமே என்று குறியீடாக கலாய்த்த காட்சியுண்டு … அதாவது யாரென்றே தெரியாத ஒரு பெண் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வருவதாகவும் இவர் எதிரில் நின்று அவரது வாகனத்தின் விளக்கு பகல் நேரத்திலும் எரிகிறது என்பதை சைகையில் தெரிவிப்பதாகவும் , அந்தப்பெண்ணின் மார்பகங்களை குளோசப் ஷாட்டில் காண்பித்தும் இவரது சைகையை காண்பித்தும் … அந்த கண்ராவியை காமெடி சீனென்றும் வைத்திருப்பார் ….

அவ்வாறு படத்தில் வைப்பது அவரது உரிமை … அதே சமயத்தில் , இவர் கூற்றுப்படி ஒரு குற்றச்சாட்டிற்கே ஆணுறுப்பை அறுக்க வேண்டும் என்றால் , பல லட்சம் இளைஞர்களுக்கு , பெண்களின் மார்பகங்கள் தங்கள் இச்சைக்கான விளையாட்டு பொருளே என்று காட்சியமைத்த இவர் மற்றும் அதற்கு விசிலடித்து வரவேற்பு கொடுத்த பார்வையாளர்கள் என்று அனைவரது ஆணுறுப்புக்களும் அல்லவா அறுக்கப்படவேண்டும் ?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts