சினிமா செய்திகள் நடிகர்

தனுஷின் வடசென்னை தீபாவளி ரிலீஸ்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வடசென்னை’. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.

வடசென்னையை மையப்படுத்திய இந்தக் கதையில் சமுத்திரக்கனி, அமீர், ‘ஆடுகளம்’ கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் முன்னோட்டம் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்பு நேற்று (ஜூன் 14) மாலை வெளியானது. படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இப்போது இரண்டு மாதங்கள் தள்ளி, நவம்பர் 6 தீபாவளி நாளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

ஏற்கெனவே விஜய், அஜீத், சூர்யா, விஷால் ஆகியோரின் படங்களும் அதேநாளில் வெளியிடவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts