இந்தியன் 2 படத்துக்கு நாயகியை உறுதி செய்த ஷங்கர்
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் இந்தியன் 2 படத்தின் திரைக்கதை எழுதும் வேலையில் தீவிரமாக இருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
இந்தப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது.
படத்தின் கதை மற்றும் சம்பள விசயங்கள் சரியாக அமைந்துவிட்டதால் நயன்தாரா நடிப்பது உறுதியாகிவிட்டது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கிறதாம்.
2019 டிசம்பரில் படத்தை வெளியிடுவது போல வேலைகள் நடக்கின்றன என்று சொல்கிறார்கள்.











