சினிமா செய்திகள்

கோபமான ரஜினி சாந்தப்படுத்திய தனுஷ் – காலா அறிவிப்பின் பின்னணி

ஜூன் 7 ஆம் தேதி காலா படம் வெளியானது. ஜூலை 7 ஆம் தேதி காலா படம் இலாபம் தந்துள்ளது என்று தனுஷின் நிறுவனம் அறிவித்தது.

இந்த திடீர் அறிவிப்புக்குக் காரணம் என்ன?

காலா படம் வெளியான நாளிலிருந்தே அந்தப்படத்தின் வசூல் மிகவும் குறைவு என்று செய்திகள் வந்துகொண்டிருந்தன.

ஆனால் படத்தைத் தயாரித்த தனுஷோ, படத்தில் நடித்த ரஜினியோ அதுபற்றிக் கவலைப்படவில்லை.

ஏனெனில் இந்தச் செய்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன என்று அவர்கள் நினைத்தார்கள்.

ஆனால் இரண்டாவது வாரத்திலேயே நிலைமையை உணர்ந்துவிட்டாலும், ரஜினி வசூல் பற்றி விசாரித்த போதெல்லாம், நன்றாக இருக்கிறது என்றே சொல்லிவந்தார்களாம்.

படம் வெளியாகி ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில்,ஒவ்வொரு பகுதி விநியோகஸ்தரும் கொடுத்த முன் தொகை கூட முழுமையாக வசூலாகவில்லையாம்.

இதனால் பணம் கொடுத்தவர்கள் மீதித்தொகையைத் திருப்பிக் கேட்டனராம்.

ஆனால், அதைத் தராமல் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்ததால், விநியோகஸ்தர்கள் வெளிப்படையாக அதுகுறித்து அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இதனால் ஊடகங்களில் அது செய்தியானது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதற்காக வடமாநிலம் சென்றிருந்த ரஜினி, ஊடகங்களில் தொடர்ந்து செய்தி வந்ததால் கோபமாகிவிட்டாராம்.

என்ன நடக்கிறது அங்கே? படம் இலாபமா? நட்டமா? உண்மையைச் சொல்லுங்கள் என்று அவர் கோபமாகக் கேட்டதும், அவரைச் சாந்தப்படுத்தும் விதமாக, நமக்குப் படம் இலாபம்தான் என்று சொல்லியிருக்கிறார்கள். சொன்னதோடு நில்லாமல் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் செய்தார்களாம்.

அதன்பின், எல்லா விநியோகஸ்தர்களையும் தொடர்பு கொண்டு, உங்கள் கணக்குகளைக் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி, வசூல் போக மீதித்தொகையைத் திருப்பிக் கொடுக்கும் வேலைகள் நடப்பதாகச் சொல்கிறார்கள்.

Related Posts