நடிகர் விஜய் மீது காவல்ஆணையரிடம் புகார்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் சர்கார் படத்தின் முதல்பார்வை அண்மையில் வெளியானது.
அதில் நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்ததால், எதிர்ப்புகள் உருவாகின.
அன்புமணி இராமதாசு டிவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்தார். மருத்துவர் இராமதாசு அக்காட்சியை நீக்கக்கோரி அறிக்கை வெளியிட்டார்.
அதற்கு படக்குழுவின் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை. இந்நிலையில் இன்று வழக்குரைஞர் தமிழ்வேந்தன் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் , இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய் ஆகியோரை விசாரித்து அந்தக்காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
இதையெல்லாம். காவல்துறை விசாரிக்க முடியுமா?











