படுவேகமாகப் பரவும் அஜித்தின் புதிய புகைப்படம்
இயக்குநர் சிவா இயக்கி வரும்‘விசுவாசம்’படப்பிடிப்பில் அஜித் கலந்துகொண்டிருக்கிறார். ஐதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் அதற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அங்கே திட்டமிட்ட நாட்களை கடந்து படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து வருவதால் அஜித்திற்காக போடப்பட்ட அறையை நீட்டிக்க வேண்டிய நிலை எழுந்தது. ஆனால் அந்த அறை பாலிவுட் ஆக்டர் ரன்வீர் சிங்கிற்கு ஏற்கெனவே புக் செய்யப்பட்டதால் அஜித் அறையை காலி செய்து கொடுத்தார் என்றும், படப்பிடிப்பு தளத்திலேயே மிக எளிமையாக தங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தார் என்றும் சொல்கிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தில் அஜித் மிக இளமையாக தோன்றி உள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
அதில் அஜித் ‘கிரீடம்’ படத்தின் போது இருந்த லுக்கில் உள்ளார். மேலும் அவரது வழக்கமான பெப்பர் அண்ட் சால்ட் லுக் இல்லை. இந்தப் படத்தில் இருவேறு வேடங்களில் அஜித் நடித்துள்ளதால் அவர் உடல் எடையை குறைத்து இளமைக்கு திரும்பியுள்ளதாக தெரிகிறது.
அஜித் படத்திற்கு முதன்முறையாக இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். படத்திற்கான இரண்டு பாடல்கள் இதுவரை படமாக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.











