சினிமா செய்திகள் நடிகர்

காலா ஓடவில்லை பட் ரஜினி ஹேப்பி

இந்தியா முழுவதும் காலா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கம் மாநிலம் குர்சியாங் என்ற பகுதியில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பில் பங்கேற்க சென்றுள்ளார்.

அப்போது அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கௌதம் தேபை சந்தித்துப்பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த்,

காலா திரைப்படம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சிறப்பாக ஓடிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தில் அம்மாநில அரசின் ஒத்துழைப்போடு அங்கும் திரையிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அப்போது கமல்ஹாசன் கட்சி தொடங்கியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தாம் தற்போது நடிகராக இங்கு வந்துள்ளதாகவும் எனவே, அதுகுறித்து கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிப்பேன் எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

தமிழகத்தில் காலா படத்தின் வசூல் மிகவும் குறைவு என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

ஆனால் ரஜினியின் பேட்டியில் அவர் காலா சம்பந்தமாக அவர் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று தெரிகிறது.

Related Posts