மெர்சல் படத்துக்கு புது மரியாதை – விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது மெர்சல். அத்திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஜி.எஸ்.டி குறித்த வசனத்திற்கு பாரதிய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இதனால் அந்தப்படம் மிகவும் பிரபலமானது. மெர்சல் வெளியாகி ஐந்து மாதங்களைக் கடந்திருக்கும் நிலையில் கடந்த மாதம் இலண்டனில் நடைபெற்ற நான்காவது பிரிட்டன் திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான விருதை வென்றது மெர்சல்.
இதைத் தொடர்ந்து தென் கொரியாவில் நடைபெறவுள்ள 22வது புச்சென் சர்வதேசத் திரைப்படவிழாவில் இப்படம் திரையிடப்படவுள்ளது என்று தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் அறிவித்துள்ளது.
படம் சரியில்லை, ஓடவில்லை என்று ஒருபக்கம் சொல்லப்படுகிறது. அதனால் சோர்ந்திருந்த விஜய் ரசிகர்கள், இன்னொருபக்கம் சர்வதேச அளவில் மெர்சல் படத்துக்குக் கிடைக்கும் மரியாதையால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.









